அதிமுக பேச்சாளர்கள் மோதல்; அணி மாறிய நிர்மலா பெரியசாமி

சென்னை: அதிமுக நட்சத்திர பேச்சாளரும் பிரபல தொலைக் காட்சி நிகழ்ச்சி நெறியாளருமான நிர்மலா பெரியசாமி சசிகலா அணியில் இருந்து விலகியுள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணி யில் இணையப் போவதாகவும் அவர் அதிரடியாக அறிவித்தார். நேற்று முன்தினம் அதிமுக பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை யகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோது, பன்னீர்செல்வத்தை 'அண்ணன்' என்று குறிப்பிட்டார் நிர்மலா பெரியசாமி. "மேலும் ஓபிஎஸ் நமக்கென்ன எதிரியா?" என்றும் அவர் தொடர்ந்து பேச, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, இதர நட்சத்திரப் பேச்சாளர்கள் சி.ஆர். சரஸ்வதி, குண்டு கல்யாணம் உள்ளிட்டோர் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைய டுத்து கூட்டத்தை விட்டு வெளி யேறினார் நிர்மலா பெரியசாமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!