பணப்பட்டுவாடா புகார்: ஆர்கே நகரில் தீவிர வாகனப் பரிசோதனை

சென்னை: இடைத்தேர்தல் நடை பெற உள்ள ஆர்கே நகர் தொகுதி யில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்க ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டிய நிலையில், அங்கு நேற்று முன்தினம் விடிய விடிய வாகன சோதனை நடை பெற்றது. பணப் பட்டுவாடாவை தடுக்கும் நோக்கில் இந்தச் சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என போலிசார் தெரிவித்துள்ளனர். இம்முறை இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுகவின் சசி கலா அணியினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 10,000 ரூபாய் வரை தருவதற்கு தயாராக இருப்பதாக பாமக குற்றம்சாட்டி உள்ளது. பணப் பட்டுவாடா நடப் பதை தடுக்க வேண்டுமென பல் வேறு கட்சிகளும் தேர்தல் ஆணை யத்தை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் வாகனப் பரி சோதனை தீவிரமடைந்துள்ளது. தேர்தல் விதிமுறைகளின் படி, ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணத்தை கொண்டு சென்றால் அதற்குரிய ஆவணத்தையும் உடன் எடுத்துச் செல்லவேண்டும். பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கு அறவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!