குமரி அனந்தன்: மது ஒழிப்புக்கு எதிரானவர்களைப் புறக்கணியுங்கள்

சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் மதுவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளிக்கவில்லை எனில் அவர்களை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என குமரி அனந்தன் வலியுறுத்தி உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வேட்பாள ருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். "மகாத்மா காந்தி மதுவற்ற பாரதம் வேண்டும் என்றார். ராஜாஜி, காமராஜ், பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களும் மது வேண்டாம் என்றார்கள். "இந்தியா முழுவதும் தீண்டாமை கூடாது என்பது போல, இந்தியா முழுவதும் குடியாமை வேண்டும் என்று கடந்த 1981ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் வரவு-செலவுத் திட்டத்தில் வேண்டுகோள் வைத்தேன்," என்று குமரி அனந்தன் நினைவுகூர்ந்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!