தினகரன்: அதிமுக எம்எல்ஏக்கள் சொன்னால் கிளம்பிவிடுவேன்

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அதிமுக வின் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் அதை வரவேற்கத் தாம் தயார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொன்னால் அரசியலை விட்டு விலகவும் தயார் எனத் தெரிவித்துள்ளார். "அதிமுகவின் இரு அணிகளும் கை கோர்த்தால் அதனை வரவேற்கத் தயாராக உள்ளேன். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, 'நாங்கள் ஆட்சியைப் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் சென்று வாருங்கள்' எனக் கூறிவிட்டால் உடனே பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிவிடுவேன். அப்படியான ஒரு பற்றற்ற நிலையில்தான் நான் இருக்கிறேன்," என்று தினகரன் அப்பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!