ஆட்சிக்குப் பாராட்டு; எதிர்க்கட்சி எம்எல்ஏவுக்கு இனோவா

புதுச்சேரி: புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைப் பாராட்டி பேசிய டிபிஆர் செல்வம் என்ற முக்கிய எதிர்க்கட்சி எம்எல்ஏவுக்கு அரசு சார்பில் இனோவா கார் கிடைத்தது. புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங் கிரஸ்=திமுக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரசுக்கு எட்டு எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதில், மண்ணாடிப்பட்டு தொகுதியைச் சேர்ந்த என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வம் கடந்த சில மாதமாக ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லிங்காரெட்டிபாளையம் பாண் கோஸ் பள்ளியில் நடந்த அரசு விழாவில் செல்வம் பங்கேற்றார். அப்போது அமைச்சர் கந்தசாமி முன்னிலையில் காங்கிரஸ் அரசை பாராட்டியும் கடந்த என்ஆர் காங் கிரஸ் அரசை விமர்சித்தும் அவர் காட்டமாக பேசினார். இதே செல்வம், கடந்த ஆட்சி யில் துணை சபாநாயகராக இருந்தபோது அவர் பயன்படுத்திய பி.ஒய்.01 பி.சி. 7777 என்ற பதி வெண் கொண்ட அதே இனோவா கார் அவருக்கு இப்போது வழங் கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பாராட்டி பேசிய டிபிஆர் செல்வம் என்ற முக்கிய எதிர்க்கட்சி எம்எல்ஏவுக்கு அரசு சார்பில் கிடைத்த இனோவா. படம்: தமிழக ஊடகம்