குழந்தையின் கூடுதல் கை, கால்கள் வெற்றிகரமாக நீக்கம்

புதுடெல்லி: ஈராக்கில் பிறந்த குழந்தையின் கூடுதல் கை, கால்களை இந்திய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றி கரமாக அகற்றியுள்ளனர். கரம் என்னும் அந்த ஏழு வயதுக் குழந்தை பிறக்கும்போதே நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்தது. ஆனால், இயல்பான கை, கால்கள் தவிர கூடுதலா னவை வளர்ச்சியற்று இருந்தன. அந்தக் குழந்தையுடன் சேர்ந்து மற்றொரு குழந்தையும் கருவில் வளர்ந்தது.

ஆயினும், அந்த இரண்டாவது கருவின் வளர்ச்சி குன்றியதன் காரணமாக அதன் வளர்ச்சியற்ற பாகங்கள் குழந் தையுடன் இணைந்து இருந்தன. அந்த கூடுதல் பாகங்களை அகற்றுவது சிரமமான பணி என் பதால் அதற்குப் பொருத்தமான மருத்துவர்களைத் தேடி வந்த கரமின் தந்தை இந்தியத் தலை நகருக்குப் பறந்தார். புதுடெல்லி யின் ஜேபீ மருத்துவமனையின் மருத்துவர்கள் மூன்று கட்டங் களாக அறுவை சிகிச்சை நடத்தி குழந்தையின் தேவையற்ற கை, கால்களை வெற்றிகரமான அகற்றி உள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தாய் மடியில் கரம். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!