இளையரைக் கட்டிவைத்த சம்பவம்: ராணுவம் விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கலகக்காரர் களின் கல்வீச்சைத் தடுக்க இளைஞர் ஒருவரை வாகனத்தின் முன்பக்கத்தில் கட்டி மனித கேடயமாக பயன்படுத்திய காணொளிக் காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவிவருகின்றன. பாதுகாப்புப் படையின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரி வித்துள்ளனர். ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "இளைஞரைக் கட்டி வைத்து மனித கேடயமாக்கி இருக்கும் சம்பவம் காண்போரை அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்துவதாக உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர் இடைத்தேர்தல் வாக்குப்பதி வின்போது பீர்வா அருகே கண்டிபுரா கிராமத்தில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரைப் பிடித்து ராணுவ வண்டியில் கட்டி கேடயமாக பயன்படுத்திய மற்றொரு காணொளியும் பரவி வருகிறது. பதினாறு நிமிடங்கள் ஓடக்கூடிய அப் படத்தில் கட்டிவைக்கப்பட்டுள்ள இளைஞர் கழுத்தில் "நான் கல்வீச்சில் ஈடுபடுவேன்" என்ற வாசகம் எழுதித் தெங்கவிடப் பட்டுள்ளது. அந்த இளைஞர் ஃபரூக் அகமத்தார் என்று அடையாளம் காணப் பட்டுள்ளது. இச்சம்பவங்களின் தொடர்பில் ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமூக ஊடகக் காணொளியில் இடம்பெற்ற படம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!