இந்தியா- பாகிஸ்தான் பேச்சு திடீர் ரத்து; பதற்றம் நீடிப்பு

தண்டனை விதிக்கப்பட்ட விவ காரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையில் பதற்றம் நிலவுகிறது. அடுத்த வாரம் நடைபெற இருந்த கடற்துறை பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளதன் மூலம் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷண் ஜாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது. இவர் இந்திய உளவாளி எனவும் இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி என்றும் பாகிஸ்தான் கூறியது. குல்பூஷண் ஜாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா, ‘ரா’ உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை ஏற்கெனவே திட்டவட்டமாக மறுத்தது.