முதலமைச்சர் பங்களாவில் பேய் நடமாட்டம்

கௌகாத்தி: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு டோர்ஜி காண்டு முதல்வராக இருந்த போது ரூ.60 கோடி செலவில் பங்களா கட்டப்பட்டது. இதில் வசித்த முதலாவது முதல்வர் இவர். 2011ஆம் ஆண்டு இவர் விமான விபத்தில் மாண்ட பின்னர் முதல்வர் பதவியேற்ற ஜார்போம் காம்லின் உடல்நலக் குறைவு காரணமாக உயிரி ழந்தார். பொறுப்பு முதல்வராக இருந்த கலிகோ புல் என்பவ ரும் கடந்த 2006ஆம் ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர், அந்த பங்களாவில் பணியாற்றிய அரசு ஊழியரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி, நடந்து வந்த தொடர் மரணங்கள் காரணமாக அங்கு பேய் உலவுவதாக கருத்து நிலவி வந்தது. இதனால் அடுத்தடுத்து வந்த முதல்வர்கள் அங்கு தங்க மறுத்தனர். இதனையடுத்து, அந்த பங்களா தற்போது விருந் தினர் மாளிகையாக மாற்றப் பட்டுள்ளது.