இந்திய உளவுப் படையைச் சேர்ந்த மூவர் பாகிஸ்தானில் கைது

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வைச் சேர்ந்த மூன்று உளவாளி களை சந்தேகத்தின் பேரில் பாகிஸ் தான் கைது செய்துள்ளதாக நம்பப்படுகிறது.கைதுசெய்யப்பட்ட மூவர் மீதும் பாகிஸ்தானுக்கு எதி ராக சதிச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ‘டான் ‘செய்தித் தாள் நேற்று தெரிவித்தது. இதுகுறித்து போலிஸ் அதி காரி ஒருவர் கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய நபராகக் கருதப்படும் கலீல், காஷ்மீருக்கு 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றிருக்கிறார்.