பாஜக, அதிமுகவை எதிர்த்து கூட்டணி அமைக்கும் திமுக

இந்தியாவின் தென்கோடி மாநில மான தமிழ்நாட்டில் 2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சிகள் இப்போதே களத்தில் குதிக்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இந்தியாவில் ஏறக்குறைய 60% தொகுதிகளைத் தன் வச மாக்கிவிட்ட பாஜக, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களையும் ‘தாமரைத் தோட்டமாக்க’ முயன்று வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாஜக தலைவர் அமித் ஷா அடுத்த மாதம் தமிழ் நாடு வருகிறார். இதற்கிடையே, பாஜகவை எப் படியும் தமிழ்நாட்டில் நுழையவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் முக்கிய திராவிடக் கட்சியான திமுக, அதற்கான வியூகங்களைக் கட்ட விழ்த்துவிட தொடங்கிவிட்டது.