தமிழ்நாட்டில் அரசாங்க வேலை தேடும் 8.13 மில்லியன் மக்கள்

தமிழ்நாட்டில் அரசு வேலை பெற காத்திருப்போரின் எண்ணிக்கை இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 8.13 மில்லியன் என்று தெரிவிக்கப்பட்டது-. பட்டதாரிகள், முதுநிலை பட்ட தாரிகள், பொறியியல் பட்டதாரிகள் உள்ளிட்ட பலரும் வேலை கிடைக் காமல் அரசாங்கத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் சென்ற நிதி ஆண்டில் வேலை தேடி அரசாங்க வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து கொண்ட பொறியாளர்களின் எண்ணிக்கை 2.45 லட்சம். 4,3-07 எம்பிபிஎஸ் மருத்துவர்களும் வேலையின்றி இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, 10ஆம் வகுப்பு பிளஸ்2 படித்தவர்கள் பலரும் தங்களைப் பதிந்துகொள் ளாமல் உள்ளனர். தமிழ்நாடு அரசாங்கத் தேர்வா ணையம் நடத்தும் தேர்வுகளை எழுதுவோரில் ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் பொறியாளர்கள் என்று தமிழக அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் ஆர்.பாலசுப் பிரமணியன் தெரிவித்தார். தமிழக நிலவரம் மிகவும் கவலை தருவ தாக அவர் குறிப்பிடுகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!