சிக்கிம் இடைத்தேர்தலில் பாஜகவும் காங்கிரசும் படுதோல்வி

கங்டோக்: சிக்கிம் மாநிலத்தின் 'அப்பர் புர்துக்' சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎப்) வேட்பாளர் டெல்லி ராம் தாப்பா வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் இவர் 8,406 வாக்குகள் பெற்றார். இவரைத் தொடர்ந்து, பாஜக வேட்பாளர் கனால் சர்மா 374 வாக்குகளும் காங் கிரஸ் வேட்பாளர் சுமித்ரா ராய் 98 வாக்குகளும் பெற்று படு தோல்வி அடைந்தனர். இடைத்தேர்தலில் 5 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இவர்கள் மொத்தம் 449 வாக்குகள் பெற்ற னர். நோட்டா வுக்கு 100 வாக்குகள் பதிவாகின. தொகுதி எம்எல்ஏ பிரேம்சிங் தமாங், ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதை யடுத்து இங்கு கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!