ஒரே ஒரு அமைச்சர் விலகியதால் ஒரே மாதத்தில் ஆட்டம் காணும் பாஜக ஆட்சி

இம்பால்: மணிப்பூரில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேசிய மக்கள் கட்சியும் நாகா மக்கள் முன்னணியும் தலா ஒரு உறுப்பினரை கொண்ட லோக் ஜனசக்தி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவளித்தன. பாஜக கூட்டணி ஆட்சி யில் தேசிய மக்கள் கட்சி யைச் சேர்ந்த எல்.ஜெய்ந்த குமார் சிங் உள்பட நால்வருக்கு அமைச் சர் பதவி வழங்கப்பட்டது. சுகா தார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜெய்ந்த குமாரிடம் மேலும் 3 முக் கிய துறைகள் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையே சுகாதார நலத் துறை இயக்குநரை மாநில அரசு அண்மையில் நீக்கி யது. இந்தத் துறையின் அமைச்ச ரான ஜெய்ந்த குமாருடன் கலந்து ஆலோசிக் கா மல் இந்த நட வடிக்கை எடுக்கப் பட்டதாகக் கூறப் படுகிறது. இந்த நிலையில் தனது அதி காரத்தில் குறுக்கீடு இருப்ப தாகக் கூறி ஜெயந்த குமார் தனது அமைச்சர் பதவியைத் துறந்துள் ளார். அவர் பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர் பைரன் சிங்குக்கு அனுப்பி வைத்தார். அமைச்சரின் இந்த பதவி விலகலால் ஆட்சியமைத்த ஒரே மாதத்தில் பாஜக கூட் டணி ஆட் சிக்கு நெருக்கடி ஏற் பட்டுள்ளது.

தேசிய மக்கள் கட்சியின் எல்.ஜெய்ந்த குமார் சிங்.