விஜயகாந்த் உடல்நிலை: ஒதுங்கும் உறவினர்கள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவ ரீதியாக உதவ உறவினர்கள் யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையில், விஜயகாந்த் விரைவில் வெளிநாட்டிற்குச் சென்று சிகிச்சை பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவ உதவி கேட்டு பிரேமலா விஜயகாந்த் உறவினர்களை அணுகியபோது, ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. “நன்றாக இருந்தபோது உறவினர்களை விஜயகாந்த் நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை. இப்போது உதவி தேவைப்படும்போது மட்டும் எங்களை அணுகுவது என்ன நியாயம்?,” என்று உறவினர்கள் கேள்வி எழுப்புவதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. உறவினர்களின் இந்த பாராமுகம் பிரேமலதாவை அதிர்ச்சியிலும் கவலை யிலும் மூழ்க வைத்துள்ளது.