தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: மின்வாரியம் உறுதி

சென்னை: கோடை காலத்தில் மின்நுகர்வு அதிகரித்தபோதிலும், தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மின்வெட்டு இருக்காது எனத் தமிழக மின்வாரியம் தெரிவித் துள்ளது. “கடந்த மார்ச் மாதம் 29 கோடி யூனிட்டாக இருந்த மின் நுகர்வு, ஏப்ரல் முதல் தேதி 32 கோடியாக உயர்ந்தது. அண்மைய நிலவரப்படி மின் நுகர்வு 33 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. “எனவே மின்நுகர்வு அதிக ரித்ததால் மின் தேவையும் உயர்ந் துள்ளது. இருப்பினும், போதுமான உற்பத்தி இருப்பதால் மின் தடை தவிர்க்கப்பட்டு வருகிறது,” என்கி றார்கள் மின்வாரிய அதிகாரிகள். இந்த அறிவிப்பின் காரணமாக கோடையில் மின்வெட்டு இருக் காது எனத் தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியான நம்பிக்கை யில் மூழ்கி உள்ளனர்.