முதல்வர் நாராயணசாமி: பொது மக்கள் போராட்டம் நியாயமானது

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான பொதுமக்களின் போராட்டம் நியாயமானது எனப் புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுவை ஆளுநர் கிரண் பேடி தமது அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார். “விவசாயிகள் வங்கிக் கடன் பிரச்சினைக்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நியாயமானது. வங்கிக் கடன்களை ரத்து செய்யவேண்டும். விவசாயிகளைப் பிரதமர் மோடி அழைத்துப் பேச வேண்டும்,” என்றார் நாராயணசாமி.