பணப் பட்டுவாடா: ஒப்புக்கொண்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: இடைத்தேர்தல் நடை பெற இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்யப்பட்டதை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புக் கொண்டதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப் புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் பல்வேறு அரசி யல் கட்சியினரும் வாக்காளர்க ளுக்குப் பண விநியோகம் செய்து வருவதாக தொடர் புகார்கள் எழுந் தன.

இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு, அவரது உதவியாளர் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை வேந்தர் கீதா லட்சுமி வீடுகள் உட்பட பல்வேறு இடங் களில் வருமான வரித்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் விஜய பாஸ்கரின் வீட்டில் இருந்து பல் வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப் பாக, ஆர்.கே.நகரில் பணப் பட்டு வாடா செய்யப்பட்டிருப்பது தொடர் பான ஆவணங்களும் ஆதாரங்க ளும் சிக்கியதாகத் தெரிகிறது.

மொத்தம் 89 கோடி ரூபாய் அளவுக்கு ஆளும்தரப்பு வாக்காளர் களுக்குப் பண விநியோகம் செய்திருப்பதாக தமிழக ஊடகங் கள் கூறுகின்றன. இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத் குமார் ஆகிய இருவரும் நேற்று விசாரணைக்காக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலு வலகத்தில் முன்னிலையாகினர். அப்போது அதிகாரிகளின் கிடுக் கிப்பிடி கேள்விகளுக்குப் பதில ளித்த விஜயபாஸ்கர், பணப் பட்டு வாடா செய்ததை ஒப்புக் கொண்ட தாக தமிழக ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!