அறுபத்து மூவர் விழா

சிறப்பாக நடந்தேறியது அறுபத்து மூவர் விழா சென்னையில் அமைந்துள்ள மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தேறியது. மாட வீதிகளில் பல்லக்குகளில் வைத்து 63 நாயன்மார்களும் அணிவகுத்துப் பவனி வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆகியோரும் அருள் பாலித்தனர். படம்: தமிழகத் தகவல் ஊடகம்