50 அடி தூரம் உள்வாங்கிய கடல் நீர்: திருச்செந்தூரில் பரபரப்பு

நெல்லை: கடல்நீர் திடீரென உள்வாங்கியதால் திருச்செந்தூரில் பரபரப்பும் அச்சமும் நிலவியது. நேற்று முன்தினம் காலை முதற்கொண்டே திருச்செந்தூர் கடற்பகுதியில் அலைகள் அதிகளவில் எழவில்லை. பின்னர் திடீரென கடல் நீர் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் மூழ்கியிருந்த பாறைகள் பலவும் வெளியே தெரிந்தன. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகன் கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் காட்சியைக் கண்டு அச்சமடைந்தனர். எனினும் சிலர் அச்சத்தையும் மீறி, கடல் உள்வாங்கியிருந்த பகுதியில் வெளியில் தெரிந்த பாறைகளைக் கடந்து சென்று கடலில் புனித நீராடினர்.