பிரதமர் அலுவலகம் முன்பு திரண்ட விவசாயிகள் கைது

புதுடெல்லி: பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளைக் காவல்துறை யினர் கைது செய்தனர். பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல் படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் கடந்த 4 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எலிக்கறி தின்பது, மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்க விடு வது, தூக்குக் கயிற்றுடன் வலம் வருவது என ஒவ்வொரு நாளும் நூதன போராட்ட வழிமுறைகளை விவசாயிகள் கடைப்பிடித்து வரு கின்றனர். மேலும் சாலை மறிய லிலும் ஈடுபட்டதால் போராட்டக் குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட சிலர் அண்மையில் கைதாகி, பின்னர் விடுவிக் கப்பட்டனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!