அமிலத் தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு திருமணம்

லக்னோ: அமில வீச்சால் பாதிக்கப்பட்ட கவிதாவுக்கு கடந்த திங்களன்று திருமணம் நடந்தது. கவிதா மீது நடத்தப்பட்ட கொடுமையான அமிலத் தாக்குதலின்போது அவருக்கு ஆதர வாய் துணை நின்றவர் இப்போது கணவராகி உள்ளார். "வாழ்க்கையின் கரடுமுரடான தருணங்களிலும் என்னை கைவிடாது தொடர்ந்து வந்தார் என் கணவர். நான் விரும்பிய ஒருவரை திருமணம் செய்துகொண்டதால் மகிழ்ச்சியாக உணர்கிறேன்," என்கிறார் 25 வயது கவிதா. உத்தரப்பிரதேசத்தின் திகாய்ட் ராய் தாலாப் அருகில் உள்ள ஸ்ரீ ஹனுமான் மந்திரைச் சேர்ந்த நிதீஷை கவிதா திருமணம் செய்து கொண்டார்.

அமிலத் தாக்குதலால் கவிதாவுக்கு மூன்று முறை அறுவை சிகிச்சை செய்து அவரது தோற்றத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வந்த மருத்துவக் குழுவினரும் ஒரு சில நண்பர்களும் இந்தத் திருமணத்திற்கு வந்திருந்தனர். வேறு ஒரு நபரை கவிதா திருமணம் செய்துகொள்ள இருப்பதை உணர்ந்த அவரது பொறாமை கொண்ட காதலரால் 2012ஆம் ஆண்டு அமிலத்தால் தாக்கப்பட்டார். கடும் தீக்கா யம் அடைந்த கவிதாவின் தலைமுடியும் கொட்டிப் போனது.

கணவர் நிதீ‌ஷுடன் கவிதா. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!