‘20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்’

சென்னை: வெப்பம் அதிகரிக்கும் நிலை அனல்காற்று என்று குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த இரு நாள்களுக்கு இந்த அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை குறிப்பிட்ட 20 மாவட்ட ஆட்சியர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் அனுப்பி உள்ளது. இதுதவிர தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பின் இயக்குநர் ஜி.லதாவும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைக் குறிப்பிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கோடைக்காலம் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் வடதமிழகத்தைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சா வூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 20 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. தமிழகம் தவிர புதுச்சேரிக்கும் அனல் காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பகலில் அனல் காற்று வீசும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் பகல் 3 மணி வரை வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டாம். பள்ளிகளில் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!