தமிழக உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் கால அவகாசம் கேட்கக் கூடாது என்று மாநிலத் தேர்தல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதமே உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற இருந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவால் தேர்தல் ரத்தானது. இதையடுத்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசும் மாநில தேர்தல் ஆணையமும் மேல்முறையீடு செய்தன. இதையடுத்து இந்தாண்டு மே 14ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கேட்டு மாநிலத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இதற்கு மேல் தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.