புதிய நிறங்களில் நகைகள் அறிமுகம்

சென்னை: எதிர்வரும் அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்வதில் நகைக்கடைகள் மும்முரமாக உள்ளன. இம்முறை பல்வேறு நிறங்களில் நகைகளை அறிமுகப்படுத்த உள்ளனர் வியாபாரிகள். வழக்கமாக தங்க நகைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். தற்போது வாடிக்கையாளர்களின் ரசனை மாறிவிட்டதால், பச்சை, வெள்ளை, இளம் சிவப்பு, சிவப்பு உள்ளிட்ட நிறங்களில், புதிய வடிவங்களில் நகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் குறைவான விலையில் நகைகளை விற்கவும் நகைக் கடைகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் 28ஆம் தேதி மாலை தொடங்கி 29 மாலை வரை அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.