நாஞ்சில் சம்பத்: அதிமுகவை அழிக்க முயற்சிக்கிறது பாஜக

சென்னை: அதிமுகவை அழிக்க பாஜக முயற்சிப்பதாக சசிகலா தரப்பைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் நிலவும் குழப்பங்களின் பின்னணியில் பாஜக உள்ளது என்றார். "இந்தியா முழுவதும் பாஜகவின் கொடியைப் பறக்கவிட வேண்டும் என பாஜகவினர் ஆசைப்படுகிறார்கள். அதிமுகவை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு கலாசார யுத்தம்," என்றார் நாஞ்சில் சம்பத். தமிழகம் காலம் காலமாக ஒரு தீவாகத்தான் இதுவரை இருந்து வந்தி ருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத் தில் பாஜக காலூன்றுவது மிகக் கடி னம் என்றார்.

"தமிழகம் பெரியாரின் பூமி. அண் ணாவின் நந்தவனம். எம்ஜிஆரின் தோட்டம். ஜெயலலிதாவின் கோட்டை. இதனை கட்டிக்காக்கும் தலைமை பொறுப்பு டிடிவி தினகரனுக்குத்தான் இருக்கிறது. "தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்த் துக் காட்டுவோம் என தமிழக பாஜக தலைவி தமிழிசை சவுந்தரராஜன் தனது நண்பரிடம் பந்தயம் கட்டி யுள்ளார்," என்றார் நாஞ்சில் சம்பத். அதிமுகவுக்கு தினகரன் தலைமை ஏற்பதே சரியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவை யும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைக்கும் முடிவு ஏற்புடை யதல்ல என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!