மகாதீர் கட்சியிலிருந்து மூத்த தலைவர் விலகல்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னைய பிரதமர் மகாதீர் முகமதுவின் பெர்சத்து கட்சியிலிருந்து அக்கட்சியை நிறுவியவர்களில் ஒருவரான கமாருல்ஸமான் ஹபிபுர் ரஹ்மான் விலகியுள்ளார். கட்சித் தலைமை மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். அதிகாரத்துக்கும் பதவிக்கும் மட்டுமே அக்கட்சி போராடி வருவதாகக் கூறிய அவர், கட்சி வழங்க முன்வந்த செயலாளர் பொறுப்பையும் புறக்கணித்து விட்டதாகத் தெரிவித்தார்.