கூரையைப் பிய்த்துக்கொண்டு விழுந்த யானை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு குட்டி யானை உள்ளே விழுந்ததால். வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவரது கைக்குழந் தையும் காயம் அடைந்தனர். கோழிப்பாலம் பகுதியில் மரத் தில் இருக்கும் பலாப் பழங்களை யானைகள் வந்து சாப்பிட்டு செல்வது வழக்கமாக இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அப்பகுதியில் வசிக்கும் யாஸ்சின் என்பவரின் வீட்டருகே உள்ள பலாப்பழங் களை ருசிக்க ஒரு குட்டியுடன் இரண்டு யானைகள் வந்துள்ளன. அப்போது குட்டி யானை, யாஸ்சின் வீட்டின் கூரை மேல் ஏற, பாரம் தாங்காமல் கூரைப் பிய்த்துக்கொண்டு உள்ளே விழுந்தது. அப்போது, வீட்டினுள் உறங்கி கொண்டிருந்த யாஸ்சினின் மனைவியும், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையும் காயம் அடைந் தனர். இந்நிலையில், வெளியே இருந்த யானைகள் வீட்டின் கதவை உடைத்துக் குட்டி யானையைக் கூட்டிச் சென்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!