காளையின் வயிற்றில் 38.4 கிலோ பிளாஸ்டிக் பைகள்

துவாக்குடி: ஜல்லிக்கட்டு காளை யின் வயிற்றிலிருந்து சுமார் 38.4 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு உள்ளன. திருச்சி மாவட்டம் துவாக் குடியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரின் ஜல்லிக்கட்டுக் காளைக் கடந்த ஒரு மாதமாக தீவனம் உட்கொள்ளாமல் மெலிந்து வந்தது. இதையடுத்து, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூ ரிக்குக் காளையை அய்யப்பன் அழைத்துச் சென்றார். மருத்துவக் குழுவினர் பரி சோதனை செய்ததில், மாட்டின் முன் வயிறு முழுவதும் அடைப்பு கள் நிரம்பி இருப்பது கண்டறியப் பட்டதையடுத்து காளையின் வயிற்றிலிருந்து 38.4 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள், எல்இடி பல்புகள், சணல், பிளாஸ்டிக் கயிறு, குண்டூசிகள், செருப்புத் தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!