அமெரிக்காவில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக இந்தியர்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப் பட்டுள்ளார். அத்துடன் அவரை கைது செய்ய துப்பு கொடுத்தால் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசாக அளிக்கப்படும் என்று ஃஎப்பிஐ அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ல் புகழ்பெற்ற உணவு விடுதியின் சமையல் அறைக் குள் வைத்து தனது மனை வியை இந்தியர் ஒருவர் கொலை செய்தார். அமெரிக்காவில் மேரிலேண்ட் மாநிலத்தின் அருண்டேல் மில்ஸ் போல்வார்ட் பகுதியில் 'டங்கின் டோனட்ஸ்' என்ற புகழ்பெற்ற உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த 26 வயதான பத்ரேஷ்குமார் சேட்டன்பாய் படேல் (படம்) என்ற இளைஞர் தனது மனைவியான பாலக் பத்ரேஷ்குமார் படேலைக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார். பத்ரேஷ் குமாரை கடந்த இரு ஆண்டுகளாகப் போலிசார் தேடி வந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!