‘அமெரிக்க குண்டு தாக்குதலில் 13 இந்தியர்கள் பலி’

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறி வைத்து அமெரிக்கா நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 13 இந்தியர்கள் பலியானதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித் துள்ளன. இதுகுறித்து ஆப்கானிஸ் தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "ஆப்கானில் நங்கர் கார் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய அச்சின் மாவட்டத்திலுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து 'அனைத்து வெடிகுண்டுகளின் தாய்' என்று கூறப்படும் மிகப் பெரிய குண்டை அமெரிக்க விமானம் வியாழக்கிழமை வீசியது. இதில் 80க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர், இவர்களில் 13 பேர் இந்தியர் கள்" என்று கூறப்பட்டுள்ளது. ஆப்கான் ஊடகங்களின் இச் செய்தியை இந்திய தேசியப் புலனாய்வு மையமான என்ஐஏ முற்றிலும் மறுத்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!