ரூ.12, 500 கோடி கறுப்பு பணத்தை மாற்ற முயற்சி

சென்னை: தமிழக அரசியல்வாதி களின் ரூ.12,500 கோடி கறுப்புப் பணம் முறைகேடாக மாற்றப்பட்டது தெடர்பாக கோகுலம் நிதி நிறு வனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தாகக் கூறப்படுகிறது. சென்னை மயிலாப்பூரில் 1968ஆம் ஆண்டு கோபாலன் என்பவர் கோகுலம் நிதி நிறு வனத்தைத் தொடங்கினார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என நான்கு மாநிலங் களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலு வலகம் சென்னை கோடம்பாக்கத் தில் உள்ளது.

கோகுலம் நிதி நிறுவன அலுவலகங்களில் வரு மான வரித்துறை அதிகாரிகள் இரு நாட்கள் சோதனை நடத்தினர். சென்னையில் 36 இடங்களிலும் கோவையில் 5, கேரளாவில் 29, புதுச்சேரியில் 2, பெங்களூரில் 7 என மெத்தம் 79 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. கடந்த நவம்பரில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டன. அப்போது தமிழ கத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் பதுக்கி வைத்திருந்த ரூ.12,500 கோடி கறுப்புப் பணத்தை தவறான வழிகளின் மூலம் வங்கி களில் மாற்றியுள்ளனர். இதற்கு பல நிதி நிறுவனங்கள் உதவி செய்துள்ளதாகத் தெரிகிறது. கோகுலம் நிதி நிறுவனமும் பணத்தை மாற்றிக்கொடுத்ததாகச் சந்தேகம் இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!