ரூ.30 லட்சத்துக்கு அரசு பதவிகள் ஏலம் எனப் புகார்

கோவை: தமிழக பதிவுத்துறை யில் சார்பதிவாளர்களுக்கு இடமாற்றம் வழங்குவதாகக் கூறி அமைச்சர் பெயரில் 10 முதல் 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகப் புகார் கள் கிளம்பியுள்ளன. முதல்வர் நடவடிக்கை எடுக் காவிடில் பேரம் பேசிய தொலை பேசி உரையாடலை வெளியிடப் போவதாக எச்சரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பதிவுத் துறை யில் அண்மைய காலமாக லஞ்சம் ஊழல் அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சார் பதி வாளர்கள் இடமாற்றத்திலும் கோடிக்கணக்கில் பேரம் பேசப் படுவதாகப் புகார் கிளம்பி உள் ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங் களிலுள்ள சார்பதிவாளர் பதவிகளுக்கு 30 லட்சம் ரூபாய் வரை பேரம் நடக்கிறது.

கோவை, திருப்பூர், மதுரை மற்றும் சேலத்தில் சார்பதி வாளர் பதவிகள் 20-30 லட்சம் வரையும் பிற இடங்களில் உள்ள பதவிகள் கூடியபட்ச மாக 10 லட்சம் ரூபாய் வரையும் பேசப்படுவதாகத் தெரிவிக்கப் படுகிறது. யார் அதிகத் தொகை கொடுக்கிறார்களோ அவர் களுக்குத்தான் இடமாறுதல் கிடைக்கும். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இடத்தைப் பிடிக்கும் சார்பதிவாளர்கள் ஓராண்டிற்குள் இரு மடங்கு சம்பாதிக்க முனைகின்றனர். இதனால் மக்கள் பெரும் பணத்தை லஞ்சமாகக் கொடுக்க வேண்டிய நிலை ஏற் படுகிறது. இந்த நிலை அக லாது என்றே தெரிகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!