45 கி.மீ. சூறாவளி; தனுஷ்கோடியில் பயணிகளுக்குத் தடை விதிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம் பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளிக் காற்று வீசிவருகிறது. கடலும் கொந்தளிப்புடன் காணப்படு கிறது. தனுஷ்கோடியில் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. ஏற்கெனவே அங்குள்ள கடல் ஆபத்தான பகுதி என்பதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள் ளது. கடல் கொந்தளிப்பு காணப் பட்டதால் சுற்றுலாப் பயணிகளை போலிஸ் வெளியேற்றியது. தனுஷ் கோடியில் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் செல்லவும் தடை விதிக் கப்பட்டது. நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என மீனவர்களிடம் கூறப்பட்டுள்ளது.