மதுக்கடைகளுக்கு எங்கும் எதிர்ப்பு

மதுக்கடைகளைத் திறக்க தமிழகம் முழுவதுமே பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பூந்தண்டலம், சக்தி நகரில் புதிதாக மதுக்கடை அமைக்கும் பணியை எதிர்த்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் திரண்டு கடப்பாரையால் மதுக்கடை கட்டடத்தை இடித்துத் தள்ளினர். படம்: தமிழக ஊடகம்