ஆளுநர் மாளிகையில் ஔவை சிலை நிறுவப்படும்

சென்னை: ஆளுநர் மாளி கையில் அவ்வையார் சிலை நிறுவப்படும் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவ் கூறியுள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவ்வை சிலையுடன் ஆத்திச்சூடி கல்வெட்டும் பதிக்கப்படும் என்றார். “சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் சுற்றுலாவில் தனியே கவனம் செலுத்தி வருகின் றன. அதன்படி இந்தியாவி லும் சுற்றுலா வளர வேண் டும். நாட்டின் கலாசாரத்தை எதிர்கால தலைமுறையின ரும் அறிய வேண்டும். “அந்த வகையில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஔவையார் சிலை இன்னும் ஒரு மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

ஆத்திச்சூடி கல்வெட்டுடன் இந்தச் சிலை அமையும். கல்வெட்டில் உள்ள ஆத்திச்சூடியை குழந்தைகள் தொட்டால் ஆத்திச்சூடி வாசகம் குழந்தைகள் மனதில் பதியும் வகையில் ஒலிக் கும்,” என்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். “மும்பையில் வசிக்கும் செல்வந்தர் ஒருவருக்கு அங்குள்ள ஆளுநர் மாளிகை வளாகத்துக்குள் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவுடன் அந்த நபர் தினமும் ஆளுநர் மாளிகைக்கு வந்து செல்வதாக என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். “அந்த வகையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையையும் பொதுமக்கள் பார்வையிட வேண்டும் என்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள் ளேன்,” என்றார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கம் நுழைவுவாயில் வெளியே அவ்வையார் சிலை அமைய உள்ளது என்றும் இதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வருவதாகவும் ஆளு நர் மாளிகை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.