அடிதடி: ஆசிரியர்கள் 5 பேர் இடைநீக்கம்

கிருஷ்ணகிரி: பள்ளி வளாகத்தில் மாணவர்கள் முன்னிலையில் ஆசி ரியைகள் ஒருவரை ஒருவர் சரமாரி யாக அடித்து, தாக்கிக்கொண்ட சம்பவம் ஊத்தங்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தலைமை ஆசிரியை உட்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத் தங்கரை அருகே உள்ள லக்கம் பட்டி நடுநிலைப் பள்ளியில் இந்தக் கேலிக் கூத்து அரங்கேறி உள்ளது. அப்பள்ளியில் தலைமை ஆசிரியை யாகப் பணியாற்றும் நிர்மலா (42 வயது), 8ஆம் வகுப்பு ஆசிரியை உதயசிவசங்கரி இடையே கடந்த 6 மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஓராண்டுக்கு முன்புதான் உதய சிவசங்கரி இப்பள்ளியில் பணிக்குச் சேர்ந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை நிர்மலா, 3 சக ஆசிரி யைகள், ஆசிரியர் திருவேங்கடம் (46 வயது) ஆகியோர் தன்னை தரக்குறைவாகப் பேசியதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லரிடம் அவர் புகார் அளித்தி ருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்றுள்ளது.

உதயசிவசங்கரி பள்ளிக்குத் தாமதமாக வந்ததால் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வித் தாள்களை விநியோகித்து உரிய நேரத்தில் தேர்வு தொடங்க ஏற் பாடு செய்துள்ளார் தலைமை ஆசிரியை நிர்மலா. பின்னர் பள்ளிக்கு வந்த உதய சிவசங்கரி, இது குறித்து அறிந்த போது ஆவேசம் அடைந்தார். தான் இல்லாமல் தனது வகுப்புக்கு எவ்வாறு தேர்வு நடத்தலாம்? என்று அவர் தலைமை ஆசிரியை நிர்மலாவுடன் வாக்குவாதம் செய்ய, அது பின்னர் கைகலப்பில் முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட னர். அப்போது சண்டையை விலக்க வந்த இதர ஆசிரியர், ஆசிரியைகளையும் உதயசிவசங் கரி தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் அவர்களும் உதயசிவசங் கரியைத் தாக்கினர். இதற்குள் ஆசிரியைகளின் மோதல் குறித்து தகவல் அறிந்த ஊர் மக்கள் பள்ளிக்குத் திரண்டு வந்தனர். அவர்களிடம் தன்னை சாதிப் பெயர் சொல்லி, சக ஆசிரி யைகள் தாக்கியதாக கூறினார் உதயசிவசங்கரி.