அணை நீர் ஆவியாகாமல் தடுக்க ஏற்பாடு: கிண்டலுக்குள்ளான அமைச்சரின் திட்டம்

மதுரை: வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாவதில் இருந்து தடுக்க அமைச்சர் செல் லூர் ராஜு உள்ளிட்டோர் மேற் கொண்ட நடவடிக்கை கிண்டலுக் குள்ளானது. மேலும் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 23 அடியாக உள்ளது. கடந்தாண்டு பருவ மழை பொய்த் ததாலும், மாநிலம் முழுவதும் தற்போது வறட்சி நிலவுவதாலும், வைகை அணைக்கு வரும் தண் ணீரின் அளவு அறவே குறைந்து போயுள்ளது. இந்நிலையில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதையடுத்து நீர்நிலைகளில் உள்ள தண்ணீர், ஆவியாகி விடாமல் தடுப்பதற்காக புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று வைகை அணை பகுதிக்கு வந்த அவர், அணையில் தேங்கியுள்ள தண் ணீரின் மீது சில 'தெர்மாக்கோல்' அட்டைகளை தூக்கிப் போட்டார். அவருடன் வந்த ஆதரவாளர்களும் தண்ணீரின் மீது 'தெர்மாக்கோல்' அட்டைகளை போட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் செல் லூர் ராஜு, அணைகளில் உள்ள தண்ணீர் மீது 'தெர்மாக்கோல்' அட்டைகளைப் போட்டு மூடுவதன் மூலம் அணை நீர் ஆவியாவது தடுக்கப்படும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!