கொலைக் கைதி உள்ளிட்ட 4 குற்றவாளிகள் தப்பி ஓட்டம்

பெரம்பூர்: சென்னை அருகே வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா ஜெயராமன் தெருவில் வியாழக் கிழமை இரவு பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மூன்று இளையர்கள் வழிப்பறியில் ஈடுபட் டனர். இதைப் பார்த்த பொதுமக் கள் அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து வண்ணாரப்பேட்டை போலிசில் ஒப்படைத்தனர். 20 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட அம்மூவர் மீதும் வழிப் பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது அப்போது தெரிய வந்தது. பொதுமக்கள் தாக்கியதில் மூன்று இளையர் களும் படுகாயமடைந்து இருந் ததால் சிகிச்சைக்காக அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் போலிசார் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வந்த அம்மூவரும் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் போலி சார் தேடி வருகின்றனர். அவர்கள் தப்பியோடிய அதே சமயம் அதே ஸ்டான்லி மருத்துவ மனையிலிருந்து கொலைக் கைதி ஒருவரும் தப்பி ஓடிவிட்டார். கோடீஸ்வரன் எனப்படும் அவர் திருவொற்றியூரைச் சேர்ந் தவர் என்றும் கொலைக் குற்றத்திற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்றும் போலிசார் கூறினர். கண் சிகிச் சைக்காக ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் தப்பிவிட்டார்.