பாதுகாப்பா, தேசிய கீத மரியாதையா: குழம்பித் தவித்த விமானப் பயணிகள்

விமானம் தரை இறங்கும் நேரத் தில் திடீரென தேசிய கீதம் இசைக்கப்பட்டதால் பயணிகளால் எழுந்து நிற்க இயலவில்லை என ஒரு புகார் கிளம்பி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை திருப்பதியிலிருந்து ஹைதராபாத் நோக்கிப் பறந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நிகழ்ந்த அச்சம்ப வம் தொடர்பில் திவாரி என்னும் பயணி புகார் தெரிவித்துள்ளார். தமது மனைவி மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் பயணம் செய்தபோது சம்பவம் நிகழ்ந்ததாகவும் அதனை காணொளியாகப் பதிவு செய்தி ருப்பதாகவும் அவர் கூறினார். ஸ்பைஸ்ஜெட் விமான நிறு வனத்திடம் சான்றுகளுடன் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

"விமானம் தரை இறங்கப் போகிறது, இடுப்பு வாரைப் பொருத்துங்கள் என்று விமானி யின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டது. எனவே, பயணிகள் அனைவரும் குழம்பிப் போய்விட்டோம். "விமானியின் சொல்படி நடப் பதா அல்லது தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க எழுந்து நிற்பதா என்று பயணிகள் விவாதத்தில் ஈடுபட்டனர். "தேசிய கீதம் அவமதிக்கப் பட்டதால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்," என்று புகாரில் திவாரி கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கிய ஸ்பைஸ்ஜெட், விமானப் பணி யாளர் ஒருவர் தவறுதலாக தேசிய கீதத்தை இசைக்கவிட்ட தாகவும் உடனடியாக அது பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் கூறினார். விசாரணை தொடரு வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!