ஓபிஎஸ் அணிக்கு குறிவைக்கும் பாஜக

இந்தியாவில் இன்னும் ஈராண்டு களில் நடைபெறவிருக்கும் மக் களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக அரசியலில் பாஜக தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந் தியா' தெரிவிக்கிறது. தற்போது ஆளும் கட்சியின ரிடையே நடைபெற்று வரும் அதிகார யுத்தத்தை உற்று நோக்கி வரும் பாஜக, ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணிக்கு வலைவீசத் தொடங்கி உள்ளதாக அச்செய்தி குறிப்பிடு கிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 15 தொகுதி களில் வெல்ல பாஜக இலக்கு வகுத்துள்ளது. ஆளும் கட்சியி னரிடையே உள்ள பிரிவுகளில் பன்னீர்செல்வத்துக்குத்தான் மக்களிடையே அதிக செல் வாக்கு இருப்பதாக அக்கட்சி நம்புகிறது.

அடுத்தடுத்த காய் நகர்வு களில் அவரது பக்கம் அதிக எம்எல்ஏக்கள் வரக்கூடும் என் றும் அதன் மூலம் விரைவில் அவர் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்கக்கூடும் என்றும் பாஜக கருதுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!