திமுக: எல்லாமே மர்மம், தீர விசாரிக்க வேண்டும்

ஊட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொட நாடு எஸ்டேட் காவலாளி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட் டம் கோத்தகிரியில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் காவ லாளி ஓம்பகதூர் நேற்று முன்தினம் நள்ளிரவில் பத்துப் பேர் கொண்ட மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன் பகதூர் படுகாயம் அடைந் தார். இவர்கள் இருவரும் நேப் பாளத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. காரில் வந்த மர்மக் கும்பல் பகதூரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் கிஷன் பகதூரை கட்டிப் போட்டு விட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. சசிகலாவுக்கு சிறை, தினகரன் விசாரணை என சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து நெருக்கடி ஏற் பட்டுள்ள சூழ்நிலையில் இந்தக் கொலை பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில் இந்த கொடநாடு எஸ்டேட்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ்டேட்டுக்குள் நுழைந்து ஆவணங்களைக் கைப்பற்றும் முயற்சியாக காவலாளி கொல்லப் பட்டாரா என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையிலான போலிஸ் படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

சக காவலாளி கொல்லப்பட்ட சம்பவம் பற்றி பரபரப்புடன் விவாதிக்கும் கொடநாடு எஸ்டேட் காவலாளிகள். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!