திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் இருவர் உண்ணாவிரதம்

திருச்சி: தங்களை நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசி, தரக் குறைவாக நடத்தியதாக திருச்சி மத்திய சிறை அதிகாரிகளின் மீது, அந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவிகளும் அரசியல் கைதிகள் சிலரும் புகார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் சிறையில் தங்களது அத்தியாவசியத் தேவை களைப் பூர்த்தி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கோவையில் உள்ள பொது நல மாணவ எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த ஏழு மாணவ, மாணவியர் கடந்த 15ஆம் தேதி ரயிலில் நெடுவாசலுக்குச் சென்றபோது போலிசாரால் கைது செய்யப்பட்டனர். அக்குழுவில் இருந்த இரு மாணவிகள் மட்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 5 மாணவர்கள் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு நக் சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருந்தபடியே மாணவிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!