குஷ்பு: அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தால் ஆச்சரியம் இல்லை

புதுடெல்லி: தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்தால் ஆச்சரியப்பட ஒன்று மில்லை என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர் பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், அதிமுகவின் இரு அணிகளும் இணையும் முயற்சிக்கு இரட்டை இலை சின்னம்தான் காரணம் என்றார். தமிழகத்தில் நடைபெறும் ஒவ் வொரு அரசியல் நகர்வுகளுக்கும் பின்னால் பாஜகவின் பங்களிப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதிமுகவின் இரு அணிகளும் தனித்தனியே தேர்தலைச் சந்தித் தால் தோல்வியே மிஞ்சும் என்றார்.

"காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக நான் இருப்பதால் சில வி ஷயங்களை ராகுல் காந்தி யிடம் சொல்ல வேண்டியிருந்தது. அதனால் அவரைச் சந்தித்தேன். "டெல்லியில் விவசாயிகளைச் சந்திக்கலாம் என்று நினைத்திருந் தேன். ஆனால் முதல்வர் பழனி சாமியுடனான சந்திப்பையடுத்து அவர்கள் ஊருக்குச் சென்றுவிட்ட னர். 41 நாட்கள் போராட்டம் நடத் திய அவர்களை முதல்வர் 40 நாட்களுக்குப் பிறகுதான் சந்தித்து இருக்கிறார்," என்றார் குஷ்பு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!