ஆ.ராசா: என் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை

புதுடெல்லி: தாம் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாமல் சிபிஐயும் அமலாக்கத்துறை யும் தொடர்ந்து மவுனம் காப்பதாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் நடந்துவரும் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையின்போது தமக்காக சுயமாக வாதாடிய அவர், தாம் கலைஞர் தொலைக்காட்சியின் பங்கு தாரரோ, நிர்வாகியோ அல்ல என்று சுட்டிக்காட்டினார். அப்படிப்பட்ட நிலையில், கலைஞர் தொலைக் காட்சிக்கு சுவான் நிறுவ னம் தொடர்புடைய நிறுவ னங்கள் கொடுத்த கடன் தொகையை, தமக்கு வழங் கப்பட்ட லஞ்சமாகக் கருத சட்டம் இடம் அளிக்குமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

"ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை உரிமம் வழங்கப் பட்ட விவகாரத்தில் நான் எடுத்த முடிவுகள் அனைத் தும் சட்டப்படி சரியானவை தான். அம்முடிவுகள் நாட் டின் தொலைத்தொடர்பு அடர்த்தி கணிசமாக உயர் வதற்கும் கட்டணக் குறைப்புக்கும் காரணமாக அமைந்தன. சிபிஐ, அம லாக்கத் துறையின் குற்றச் சாட்டுகள், ஆவணங்கள், சாட்சியங்களின் அடிப்ப டையில் பொய்யானவை," என்று ராசா வாதிட்டார். இதையடுத்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், இன்றுடன் தமது இறுதி வாதங்களை முடித் துக்கொள்வதாகத் தெரி வித்தபோது, அதை நீதிபதி சைனி ஏற்றுக்கொண்டார். சிபிஐ தரப்பின் இறுதிவாதத் துக்குப் பின் இவ்வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!