மீனவர்கள், விவசாயிகளுக்காக மணற்சிற்பம்

பரமக்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சரவணன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணற்சிற்பங்கள் உருவாக்கி வருகிறார். சித்திரை அமாவாசை அன்று ராமேசுவரம், அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராட வரும் பக்தர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற் படுத்தும் வகையில் தமிழக மீனவர்களின் படகுகளை மீட்போம், விவசாயிகளை மீட்போம் என்ற கருப்பொருளில் மணற்சிற்பம் உருவாக்கி உள்ளார். இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 143 படகுகளை மீட்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார். படம்: தமிழகத் தகவல் ஊடகம்