நெடுஞ்சாலையோர மதுக்கடைகள்: மீண்டும் திறக்க உயர் நீதிமன்றம் தடை

சென்னை: தமிழகத்தில் மூடப் பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பாமகவுக்கு கிடைத் துள்ள வெற்றி என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வலி யுறுத்தி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அக்கடைகளை மூட உத்தரவிட் டது. மேலும், உச்ச நீதிமன்றமும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து ஐநூறு மீட்டர் தூரத் துக்குள் அமைந்துள்ள மதுக்கடை களை மூட உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மதுக்கடை கள் மூடப்பட்டன. இந்நிலையில், நகரப்பகுதியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை எல் லாம் மாநகராட்சிகள், நகராட்சி களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை ஆணை யர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது சட்டவிரோதமானது என்று பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த உத்தரவை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாமக வழக்கறி ஞர் கே.பாலு ஆகியோர் தனித் தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு நிர்வாக காரணங்களைக் கூறி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல் இழக் கச் செய்யும் விதமாக நிர்வாக ரீதியான உத்தரவுகளைப் பிறப் பிக்க முடியாது என்று குறிப்பிட்டனர்.