‘டாஸ்மாக்’ கடையை சூறையாடிய பெண்கள்

திருப்பூர்: உச்ச நீதிமன்ற உத்த ரவைத் தொடர்ந்து தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மதுக் கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. ஆனால் அந்தக் கடைகளுக்குப் பதிலாக வேறு இடங்களில் புதிய மதுக் கடைகள் தொடங்க பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் தினமும் மதுக் கடைக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திருப் பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுக் கடை பாருடன் செயல்பட்டு வருகிறது. கல்லூரி அருகிலுள்ள இந்த மதுக் கடையை அகற் றவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும், இதேபோல் அதிகாரி கள் பலரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அந்த மதுக் கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்றுதிரண் டனர்.

கொதித்தெழுந்த பெண்களும் நொறுக்கப்பட்ட மதுக் கடையும். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!