இருளில் மூழ்கியது சென்னை

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலுக்கு வந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கடந்த இரு தினங்களாக சென்னை உள் ளிட்ட பல்வேறு நகரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல அஞ்சி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் தொடர் மின்வெட்டால் மக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். நாகை, கடலூர், திருவாரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை என பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பகல் நேரத்தில் கடும் வெப்பம், அனல் காற்று, புழுக்கம் காரண மாக மக்கள் அவதிப்பட நேர்கிறது. மேலும் சிறு, குறு தொழில் புரிவோர் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக புலம்பத் தொடங்கி உள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!