‘பதவியிலிருந்து விலகினால் மட்டுமே பிணை கிடைக்கும்’

புதுடெல்லி: அதிமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு டெல்லி தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படு வதாக தகவல் வெளியாகி உள் ளது. இதனால் தினகரன் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பதவியை விட்டு விலகினால் மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக் கில் பிணை கிடைக்கும் என்றும் டெல்லி தரப்பு தினகரனுக்கு எச்ச ரிக்கை விடுத்திருப்பதாக தமிழக ஊடகம் தெரிவிக்கிறது. அதிமுகவில் பிளவு ஏற்பட் டுள்ள நிலையில் அக்கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை தங் கள் அணிக்குப் பெற்றுவிட டிடிவி தினகரன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில் சின்னத்தைப் பெறுவதற்காக தேர் தல் ஆணைய அதிகாரிகளுக்கே அவர் 50 கோடி ரூபாய் லஞ்சம் தர முயன்றதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில் இந்த விவகாரத் தில் இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திராவை டெல்லி போலி சார் கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், தினகரனும் கைதானார். அவரும், சசிகலா குடும்பத்தினரும் பல்வேறு மாநிலங்களில் செய்துள்ள முதலீ டுகள் குறித்து டெல்லி போலிசார் விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான முன் னோட்டமாகவே தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார் ஜுனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரும் விசாரணை வளை யத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியில் இருந்து விலக வேண்டும் என தினகரனுக்கு 'டெல்லி' தரப்பு நெருக்கடி கொடுப்பதாகத் தெரிகிறது. இல்லையேல் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு மேலும் சிக்கலாகும் என்றும் பிணை கிடைப்பது கடினமாகிவிடும் என்றும் டெல்லி தரப்பு அவருக்கு எச்சரிக்கை விடுத்து இருப்பதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. இதனால் தினகரன் தரப்பு கடும் அதிர்ச்சியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!